பள்ளிபாளையத்தில் முப்பெரும் ஜோதிட திருவிழா
பள்ளிபாளையத்தில் முப்பெரும் ஜோதிட திருவிழா விமரிசையாக நடைபெற்றது.;
பள்ளிபாளையத்தில் முப்பெரும் ஜோதிட திருவிழா நடைபெற்றது.
பள்ளிபாளையத்தில், உலக சமாதான மகரிஷி சேவா அறக்கட்டளை, மகரிஷி ஜோதிட ஆராய்ச்சி அறிவகம் மற்றும் பயிற்சி மையம் சார்பில், ஐந்தாம் ஆண்டு துவக்க விழா, பட்டமளிப்பு விழா, நூல் வெளியீட்டு விழா ஆகிய முப்பெரும் ஜோதிட திருவிழா நடைபெற்றது. டாக்டர் நெல்லை வசந்தன், புதுக்கோட்டை ரவிச்சந்திரன் தலைமை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக சென்னை செல்வீதாமு, நாமக்கல் டாக்டர் சிவகுமார் பங்கேற்று வாழ்த்தி பேசினார்கள்.
ஈரோடு பூபதி, மருதமலை சுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக டாக்டர் விஜயலட்சுமி, திண்டுக்கல் சின்னராஜ் பங்கேற்றனர். உலக சமாதான மகரிஷி சேவா அறக்கட்டளை, மகரிஷி ஜோதிட ஆராய்ச்சி அறிவகம் மற்றும் பயிற்சி மையம் நிறுவனர் முகுந்தன் முரளி வரவேற்றார். இந்த விழாவில் நட்சத்திர பேச்சாளார்கள் மற்றும் ஜோதிட ஆர்வலர்கள் பங்கேற்று பேசினார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜோதிட பயிற்சியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.