பாலமலை யாத்திரை துவங்கிய குமாரபாளையம் பகுதி பக்தர்கள்
குமாரபாளையம் பகுதியை சேர்ந்த பக்தர்கள் பாலமலை யாத்திரையை துவக்கினர்.;
குமாரபாளையம் பகுதியை சேர்ந்த பக்தர்கள் கோமாளி, கரடி வேடமிட்டவாறு பாலமலை யாத்திரையை துவக்கினர்.
ஆண்டுதோறும் சித்திரை மாதம் சனிக்கிழமைகளில், பக்தர்கள் ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகில் உள்ள பாலமலை சென்று சிவனை வணங்கி வருவது வழக்கம். குமாரபாளையம் அருகே வீரப்பம்பாளையம், வீ. மேட்டூர், அருவங்காடு, புதுப்பாளையம், ரங்கனூர், எளையாம்பாளையம், பூலாம்பட்டி, இடைப்பாடி, தேவூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த பக்தர்கள், அந்தந்த பகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி பாலமலைக்கு பயணம் துவங்குவர்.
அதன்படி, இந்தாண்டுக்கான பாலமலை கோவிலுக்கான பயணத்தை தற்போது தொடங்கியுள்ளனர். கோமாளி, கரடி, சிங்கம் உள்ளிட்ட பல வேடங்களில் செல்வது விசேஷம். வெள்ளிக்கிழமை மாலை 06:00 மணிக்கு மலை ஏற தொடங்கினால், சனிக்கிழமை மாலை 06:00 மணியளவில் மலை உச்சியில் உள்ள கோவிலை சேருவார்கள். இங்கு சொந்த ஊரிலிருந்து நடந்தே சென்று மலை ஏறி, சுவாமி தரிசனம் செய்தவர்கள் வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும் என்பது ஐதீகம்.