பகலில் பல மணி நேரம் மின் தடை பொதுமக்கள், வியாபாரிகள் தவிப்பு

குமாரபாளையத்தில் பகலில் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள், வியாபாரிகள் தவிப்புக்கு ஆளாகினர்.;

Update: 2025-03-12 15:40 GMT

பகலில் பல மணி நேரம் மின் தடை

பொதுமக்கள், வியாபாரிகள் தவிப்பு


குமாரபாளையத்தில் பகலில் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள், வியாபாரிகள் தவிப்புக்கு ஆளாகினர்.

குமாரபாளையம் சேலம் சாலையில் கேபிள் பழுது காரணமாக நேற்று பகலில் பலமுறையும், மாலை 02:00 மணி முதல் 05:00 மணி வரையிலும் மின் தடை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள், விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் பெரும் அவதிக்கு ஆளாகினர். மாதந்திர மின் நிறுத்தம் செய்யப்படும் நாட்களில் இது போன்ற பணிகளை செய்திட வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விசைத்தறி தொழிலாளர்கள் கூறியதாவது:

கடந்த 15 நாட்களாக காளியம்மன், மாரியம்மன் திருவிழாவையொட்டி விடுமுறை விடப்பட்டு, நேற்று முதல் தான் வேலைக்கு வந்துள்ளோம். இந்த நிலையில், இது போல் செய்தால், எப்படி ஜவுளி உற்பத்தி செய்வது? எங்களுக்கு எப்படி கூலி கிடைக்கும்? எங்கள் வாழ்வாதாரம் இதனால் பாதிப்புக்கு ஆளாகிறது. மின்வாரிய அதிகாரிகள் மின் நிறுத்தம் செய்யும் முன், எங்களை போன்ற ஏழை தொழிலாளர்கள் நிலையை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Similar News