குமாரபாளையம் அருகே நெல் கொள்முதல் மையம் துவக்கி வைத்த கலெக்டர்
குமாரபாளையம் அருகே நெல் கொள்முதல் மையத்தை, நாமக்கல் கலெக்டர் ஷ்ரேயா சிங் திறந்து வைத்தார்.;
குமாரபாளையம் அருகே எலந்தகுட்டை ஊராட்சியில், நெல் கொள்முதல் மையத்தை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கிடங்கின் மூலம், நேரடியாக நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து குமாரபாளையம் அருகே எலந்தகுட்டை ஊராட்சியில், தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட நெல் கொள்முதல் மையத்தை, மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யும் இணைய வழிமுறைகள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார். இந்தாண்டு, விவசாயிகள் பயன்பெறும் சன்னரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு 2,060 ரூபாயும், போது ரக நெல்லுக்கு குவிண்டால் 2,015 ரூபாயும், விலை நிர்ணயம் செய்யபட்டுள்ளதால், விவசாயிகள் பயன்பெறும் வகையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறித்தினார்.
செய்தியாளர்களிடம் பேசிய கலெக்டர் ஸ்ரேயா சிங், நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதால், மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மையங்களில் 1,307 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இதுவரை மாவட்டத்தில் 83% முதல்கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. 15 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களில் 52, 514 பேருக்கு முதல் கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.