குமாரபாளையம்: பச்சாம்பாளையத்தில் மாரியம்மன் திருவிழா- பக்தர்கள் வழிபாடு

குமாரபாளையம் அருகே பச்சாம்பாளையம் அல்லிநாயக்கன்பாளையம் மாரியம்மன் திருவிழா நடைபெற்றது.;

Update: 2022-05-13 08:30 GMT

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த, அல்லிநாயக்கன்பாளையம் மாரியம்மன்,

குமாரபாளையம் அருகே பச்சாம்பாளையம் அல்லிநாயக்கன்பாளையம் மாரியம்மன் திருவிழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இதையொட்டி காவேரி ஆற்றிலிருந்து மேளதாளங்கள் முழங்க தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் சர்வ அலங்காரங்களுடன் அருள்பாலித்தவாறு வந்தார்.

அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தவாறு கோவிலை வலம் வந்து பொங்கலிட்டு வழிபட்டனர்.

Tags:    

Similar News