பவானி அருகே பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பவானி அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாமக்கல் மாவட்டம், பவானி அருகே ஆவின் நிறுவனம் முன்பு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க மாநில தலைவர் முனுசாமி தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்திடு, பால் பண பாக்கியை உடனே வழங்கிடு, ஆவின் கலப்பு தீவனம் 50 சதவீத மானிய விலையில் வழங்கிடு, குழந்தைகள் சத்துணவில் ஆவின் பாலையும் சேர்த்திடு, என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகக் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதில் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.