வெளி மாநில லாட்டரி டிக்கெட் விற்ற இருவரில் ஒருவர் கைது
குமாரபாளையத்தில் வெளி மாநில லாட்டரி டிக்கெட் விற்ற இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.;
வெளி மாநில லாட்டரி டிக்கெட்
விற்ற இருவரில் ஒருவர் கைது
குமாரபாளையத்தில் வெளி மாநில லாட்டரி டிக்கெட்
விற்ற இருவரில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குமாரபாளையத்தில் வெளி மாநில லாட்டரி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. நடராஜன் ஆகியோர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். சேலம் சாலை குளத்துக்காடு பகுதியில் லாட்டரி விற்பது தெரியவந்தது. நேற்றுமுன்தினம் மாலை 03:00 மணியளவில் நேரில் சென்ற போலீசார், லாட்டரி விற்ற, அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி முரளிதரன், 49, என்பவரை கைது வெளி மாநில லாட்டரி டிக்கெட்டுக்களை பறிமுதல் செய்தனர். இவருடன் லாட்டரி விற்ற பிரபு என்ற நபர் தப்பி சென்றார். தப்பி சென்ற பிரபுவை போலீசார் தேடி வருகின்றனர்.