ஐயப்பன் ஆபரண பெட்டியை சுமக்க நாமக்கல் பக்தர் உள்ளிட்ட தமிழர்களுக்கு வாய்ப்பு

சபரிமலையில் ஐயப்பன் ஆபரண பெட்டியை சுமக்க நாமக்கல்பக்தர் உள்ளிட்ட தமிழர்களுக்கு வாய்ப்பு வாய்ப்பு கிடைத்துள்ளது.

Update: 2021-12-25 11:45 GMT

பைல் படம்.

கேரளா மாநிலம், சபரிமலையில் ஐயப்பன் ஆபரண பெட்டியை சுமக்க நாமக்கல் மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்க பக்தர் உள்ளிட்ட தமிழர்களுக்கு வாய்ப்பு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இது பற்றி நாமக்கல் மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்க செயலர் ஜெகதீஸ் கூறுகையில், கேரளா மாநிலம், சபரிமலையில் உள்ள ஐயப்பன் சுவாமிக்கு ஆண்டுதோறும் திருவாங்கூர் தேவஸ்தானம் சார்பில் ஆரங்குளா பகுதியில் இருந்து ஐயப்பன் ஆபரண பெட்டி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, ஐயப்பன் சுவாமிக்கு அணிவிப்பது வழக்கம்.

இந்த ஆண்டு கடந்த நான்கு நாட்கள் முன்பு ஆபரண பெட்டி ஊர்வலமாக துவங்கியது. நேற்று மாலை இது ஆபரண பெட்டி பம்பை வந்து சேர்ந்தது. பம்பை முதல் சபரி மலை சன்னிதானம் வரை அகில பாரத ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகளுக்கு இந்த ஆபரண பெட்டி சுமந்து வரும் பாக்கியம் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் படி நேற்று நாமக்கல் மாவட்டம் ஜேடர் பாளையம், அரசம்பாளையம் பகுதியை சேர்ந்த மோகனசுந்தரம், செஞ்சி நிர்வாகி செந்தில்குமார், மதுரை நிர்வாகி செல்வராஜ், நீலகிரி நிர்வாகி சந்திரசேகர்மற்றும் கேரளாவை சேர்ந்த நான்கு பக்தர்கள் இந்த ஆபரண பெட்டியை சுமந்து வரும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றனர் என தெரிவித்தார்.

Tags:    

Similar News