திறந்தவெளியில் மதுப் பிரியர்களின் அட்டகாசம்: குமாரபாளையம் பொதுமக்கள் அச்சம்

குமாரபாளையத்தில் மது பிரியர்கள் திறந்தவெளியில் அருந்துவதால் பொதுமக்கள் அச்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.;

Update: 2021-09-05 13:30 GMT

குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் டாஸ்மாக் கடையின் முன் திறந்தவெளி பாராக பயன்படுத்தி வரும் மதுப்பிரியர்கள்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் வாங்கும் நபர்கள் கடைக்கு முன்பும், அருகில் இருக்கும் வேதாந்தபுரம் செல்லும் கோம்பு பள்ளம் பாலத்தின் மீதும் கூட்டமாக நின்று மது பாட்டில்கள், நொறுக்கு தீனிகள் வைத்துக்கொண்டு திறந்த வெளி பாராக பயன்படுத்தி வருகிறார்கள்.

இவர்கள் குடித்து விட்டு தகாத வார்த்தையால் பேசுவதும், சண்டை போட்டுக்கொள்வதும், பெண்களை கேலி செய்தல், ஆண்களிடம் வாகனத்தை நிறுத்தி பணம் கேட்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதி நுழைவுப்பகுதி என்பதால் ஊர் பெரியோர்களும் இது போன்ற சம்பவங்களால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே டாஸ்மாக் நிர்வாகத்தினரும் போலீசாரும் இவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News