குமாரபாளையம் அரசு கலைக்கல்லூரியில் சேரணுமா..? ஆன் லைனில் விண்ணப்பிங்க..!
குமாரபாளையம் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு ஆன் லைனில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.;
அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு ஆன் லைனில் விண்ணப்பிக்க அழைப்பு
குமாரபாளையம் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு ஆன் லைனில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கல்லூரி முதல்வர் ரேணுகா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
குமாரபாளையம் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் ஜூலை 3ல் துவங்கவுள்ளது. ஜூலை 3 முதல் ஜூலை 10 வரை இளங்கலை மற்றும் இளமறிவியல் முதலாம் ஆண்டு சேர்க்கை மாணவர்களுக்கு வழிகாட்டும் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது. கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு ஆன் லைனில் விண்ணப்பிக்காத மாணவர்கள் ஜூலை 5 வரை ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம். உதவிக்கு கல்லூரியின் சேர்க்கை உதவி மையத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கான கலந்தாய்வு ஜூலை 8ல் நடைபெறும். மேலும் ஏற்கனவே ஆன்லைனில் விண்ணப்பித்து கல்லூரியில் சேராத மாணவர்கள் ஜூலை 8ல் கல்லூரிக்கு வந்து மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
உலக முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தையொட்டி, உறுதிமொழி எடுக்கும் நிகழ்வு கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமையில் நடந்தது. கல்லூரி பேரவை துணைத்தலைவர் ரகுபதி, உறுதிமொழி வாசிக்க, பேராசிரியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர், அலுவலக பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.