நின்றிருந்த லாரி மீது ஆம்னி பஸ் மோதியதில் ஒருவர் பலி, இருவர் படுகாயம்!
குமாரபாளையத்தில் நின்றிருந்த லாரி மீது ஆம்னி பஸ் மோதியதில் ஒருவர் பலியானதுடன், இருவர் படுகாயமடைந்தனர்.;
நின்றிருந்த லாரி மீது ஆம்னி பஸ் மோதியதில் ஒருவர் பலி, இருவர் படுகாயம்
குமாரபாளையத்தில் நின்றிருந்த லாரி மீது ஆம்னி பஸ் மோதியதில் ஒருவர் பலியானதுடன், இருவர் படுகாயமடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் வசிப்பவர் அருள்குமார், 22. பெங்களூரில் பிரைட் கல்லூரியில் எல்.எல்.பி. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். மூன்றாம் ஆண்டு தேர்வுக்கு விண்ணப்பம் பணிக்காக பெங்களூர் சென்று விட்டு, ஆம்னி பேருந்தில் ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தார். இவர் பேருந்தின் முன் பக்கம் கிளீனர் அமரும் இருக்கையில் அமர்ந்து வந்தார். நேற்றுமுன்தினம் மாலை 06:45 மணியளவில் குமாரபாளையம் டீச்சர்ஸ் காலனி அருகே வந்த போது, சாலையில் ஓரமாக நின்றிருந்த லாரியின் பின்பக்கம் பேருந்து மோதியதில், அருள்குமார், ஓட்டுனர் ஜெயக்குமார், 50, மற்றும் கிளீனர் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்தனர். இதில் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அருள்குமார் இறந்தார். ஓட்டுனர், கிளீனர் இருவரும் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.