குமாரபாளையத்தில் இருசக்கர வாகன விபத்து: ஒருவர் பலி

சேலம் கோவை புறவழிச்சாலையில் இருசக்கர வாகனம் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார்.;

Update: 2021-09-20 11:30 GMT

குமாரபாளையம் காவல் நிலையம். (பைல் படம்)

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் அன்பழகன், 34. கட்டுமான கூலி தொழிலாளி. இவர் தனது டி.வி.எஸ். போனெக்ஸ் டூவீலரில் குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலையில் சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இவருக்கு முன்னாள் சென்று கொண்டிருந்த பைக் ஓட்டுனர் எவ்வித சைகையும் காட்டாமல் திடீரென்று பிரேக் போட்டதால் அன்பழகன் டூவீலர் அந்த டூவீலர் மீது மோதியது. இதில் அன்பழகனுக்கு தலையில் பலத்த அடிபட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனில்லாமல் அன்பழகன் உயிரிழந்தார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், முன்னாள் சென்ற நபர் குமாரபாளையம் அருகே வளையக்காரனூரை சேர்ந்த மரம் வெட்டும் கூலி தொழிலாளி கந்தசாமி, 44, என்பது தெரிய வந்தது. கந்தசாமியை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News