டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்: கார் ஓட்டுனர் கைது
குமாரபாளையம் அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயமடைந்ததுடன், கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.;
குமாரபாளையம் அருகே கத்தேரி சாமியம்பாளையத்தை சேர்ந்தவர் சீனிவாசன், 57, சமையல் வேலை செய்பவர். இவர் நேற்று காலை 08:00 மணியளவில் சேலம் கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு பகுதியில் டி.வி.எஸ். எக்ஸல் வாகனத்தில் சாலையை கடக்கும் போது, சேலம் பக்கமிருந்து வேகமாக வந்த கார் மோதியதில் இவர் படுகாயமடைந்தார். இவர் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்ததில் கார் ஓட்டுனர் திருச்செங்கோடு கருவேப்பம்பட்டியை சேர்ந்த ஜெயகுமார், 43, என்பது தெரியவந்தது. கார் ஓட்டுனர் ஜெயகுமாரை கைது செய்து, குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.