3 மாதத்திற்கு ஒருவர்.. வரும் கமிஷனர் எத்தனை மாதமோ?
இனி வரும் குமாரபாளையம் கமிஷனராவது மூன்று ஆண்டுகள் பணி செய்யும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
குமாரபாளையம் நகராட்சி அலுவலக கமிஷனராக இருத்த ஸ்டான்லி பாபு கிட்டதிட்ட மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். இவருக்கு பின் வந்த பெண் கமிஷனர் நகரமன்ற தேர்தல் முடிந்து, தலைவர் உள்ளிட்ட கவுன்சிலர்களை பதவியில் அமர்த்தியதும் மூன்று மாதங்களில் பணியிட மாறுதலில் சென்றார்.
இவருக்கு பின் வந்த கமிஷனர் விஜயகுமார் மூன்று மாதங்கள் ஆனதும் இவரும் பணியிட மாறுதல் செய்யப்பட்டார். நகரில் உள்ள 33 வார்டுகளை சுற்றி பார்த்து, ஊரில் என்னென்ன, எங்கெங்கு உள்ளது? யார் பொறுப்பாளர்கள்? இது வரை நகராட்சி சார்பில் செய்யப்பட்ட பணிகள் எவை? தற்போது செய்யபட்டு வரும் பணிகள் எவை? மிகவும் அத்தியாவசியமாக செய்ய வேண்டிய பணிகள் எது? என்று அறிந்து கொள்ளவே மூன்று மாதம் ஆகும்.
இந்த நிலையில் வரும் கமிஷனர் அனைவரும் உடனுக்குடன் சென்றால் நகரின் வளர்ச்சி என்னவாகும்? என்பது பொதுமக்கள் கருத்தாக உள்ளது. ஆகவே இனி வரும் கமிஷனராவது மூன்று ஆண்டுகள் பணி செய்யும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.