போக்சோ வழக்கில் ஒருவர் கைது

குமாரபாளையத்தில் போக்சோ வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2025-01-04 17:00 GMT

போக்சோ வழக்கில் ஒருவர் கைது - குமாரபாளையத்தில் போக்சோ வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குமாரபாளையம் அருகே வீ. மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் லலிதா, 35. கட்டிட கூலி. இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். இவரது கணவர் சில ஆண்டுகள் முன்பு இறந்து விட்டார். இவர்தான் பிள்ளைகளை வளர்த்து வருகிறார். 17 வயது மூத்த மகள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இளைய மகள் 10ம் வகுப்பு படித்து வருகிறார். ஒரு மாதம் முன்பு லலிதா வேலைக்கு சென்று விட்டார். மூத்த மகள் கல்லூரி செல்வதாக கூறி சென்று விட்டார். பகல் 12:00 மணியளவில் மகள் படிக்கும் கல்லூரியிலிருந்து, மகள் கல்லூரிக்கு வரவில்லை என்று லலிதாவுக்கு போன் வந்துள்ளது. பல பக்கம் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் கொடுக்க, போலீசார் காணாமல் போன மாணவியை தேடிவந்தனர். இவரது புகாரில் பக்கத்தில் உள்ள வேல்முருகன், 23, என்பவருடன் சென்று விட்டதாக கூறியிருந்தார். குமாரபாளையம் போலீசார் விசாரணையில் 2024, நவ. 23ல், இருவரும், கவுந்தபாடியில் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. நேரில் சென்ற போலீசார் வேல்முருகனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News