விஜயகாந்த் பிறந்த நாளில் ஜி.எச். சிற்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி
விஜயகாந்த் பிறந்த நாளில் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி வழங்கப்பட்டது.
குமாரபாளையம் தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்த் பிறந்த நாள்விழா மாவட்ட துணை செயலாளர் மகாலிங்கம், நகர செயலர் நாராயணசாமி தலைமையில் கொண்டாடப்பட்டது. சிறப்பு அழைப்பாளர்களாக மாநில கேப்டன் மன்ற துணை செயலாளர் சுல்தான் பாஷா, மாவட்ட செயலாளர் விஜய்சரவணன் பங்கேற்று பஸ் நிலையம் உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் பட்டாசு வெடித்து, கட்சிக்கொடியேற்றி வைத்து இனிப்புகள், அன்னதானம் வழங்கினர். காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அரசு மருத்துவமனையில் குடிநீர் சுத்திகரிப்பு கருவியை தலைமை டாக்டர் பாரதியிடம் வழங்கிய பின், உள் நோயாளிகளுக்கு பால், பன், பழங்கள் வழங்கப்பட்டன.