குமாரபாளையம் கோம்பு பள்ளம் பாலத்தின் பக்கவாட்டு சுவரில் பெயிண்டிங் பணி
குமாரபாளையம் கோம்பு பள்ளம் பாலத்தின் பக்கவாட்டு சுவரில் பெயிண்டிங் வேலைகள் துவக்கப்பட்டது.;
குமாரபாளையம் தம்மண்ணன் சாலை கழிவுநீர் கோம்பு பள்ளத்தில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் தற்போது பெயிண்டிங் வேலைகள் துவக்கப்பட்டது.
குமாரபாளையம் அப்பன் பங்களா பகுதியில் கழிவுநீர் செல்லும் கோம்பு பள்ளம் உள்ளது. இதன் மேல் தரைமட்ட பாலம்அமைக்கப்பட்டிருந்தது. மழை காலங்களில் தரை மட்ட பாலம் மூழ்கி, சாலை துண்டிக்கப்பட்டால், பொதுமக்கள் பல கி.மீ.தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டு வந்தது. இதனால் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர் இந்த பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க பல வருடங்களாக கோரிக்கை வைத்தனர். அதன்படி, நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் நடவடிக்கையின் பேரில் பாலம் கட்டுமான பணி சில மாதங்கள் முன்பு துவங்கியது. தற்போது இந்த பாலம் கட்டுமான பணிகள் யாவும் முழுமை பெற்று, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. தற்போது அந்த பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் பெயிண்ட் பணிகள் நடந்து வருகிறது.
குமாரபாளையம் நகராட்சி சார்பில் இடைப்பாடி சாலையில் அரசு மருத்துவமனை அருகே தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. இது அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், கட்டிடங்கள் மிகவும் சேதமானது. இதனை புதுப்பிக்கும் பணி கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 278.24 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்காலிகமாக பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் மார்க்கெட் செயல்பட்டு வருவதால், பேருந்துகள் வந்து செல்ல மிகவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன், மார்க்கெட் கட்டுமான பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்து, பணிகள் விரைந்து முடிக்க ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார். மார்க்கெட் சங்க தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர் ராஜ், நிர்வாகிகள் செந்தில்குமார், ஆனந்தன், உள்பட பலர் உடனிருந்தனர்.
நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில், குமாரபாளையம் நகராட்சியில் மாஸ் கிளீன் பல இடங்களில் செய்யப்பட்டது. மேலும் நகரை சுகாதாரமாக வைத்துக்கொள்வோம், அசுத்தம் செய்ய மாட்டோம், என்பது உள்ளிட்ட உறுதி மொழிகளை நகராட்சி சுகாதார அலுவலர் ராமமூர்த்தி வாசிக்க, நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கவுன்சிலர் வேல்முருகன், ஆய்வாளர்கள் செல்வராஜ், சந்தானகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில் உள்ள சாலையோர கடைகள், தினசரி காய்கறி மார்க்கெட், பூக்கடைகள், பழக்கடைகள், ஓட்டல், பேக்கரி, மளிகை, உள்ளிட்ட பல கடைகளில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் மணிவண்ணன், குமாரபாளையம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் கேரிபேக், பிளாஸ்டிக் டம்ளர்கள், உள்ளிட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் 8 கிலோ பறிமுதல் செய்து, நான்காயிரத்து 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இரு துறை அதிகாரிகளாலும் இந்த ஆய்வு தினசரி தொடரும் என வியாபார நிறுவனத்தாருக்கு அறிவுறுத்தப்பட்டது. நகராட்சி சார்பில் எஸ்.ஓ. செல்வராஜ், சந்தானகிருஷ்ணன், ஜான்ராஜா, மாசுக்கட்டுபாட்டு வாரியம் சார்பில் உதவி பொறியாளர்கள் சந்தானம், விஜயன், உள்பட பலர் பங்கேற்றனர்.