குமாரபாளையத்தில் நடிகர் விஜய் பிறந்த நாளையொட்டி ரத்த தான முகாம்
குமாரபாளையத்தில் நடிகர் விஜய் பிறந்த நாளையொட்டி ரத்ததான முகாம் நடந்தது.;
குமாரபாளையத்தில் நடிகர் விஜய் பிறந்த நாளையொட்டி நடந்த ரத்ததான முகாமினை எஸ்.ஐ. சந்தியா துவக்கி வைத்தார்.
நடிகர் விஜய் பிறந்த நாளையொட்டி குமார பாளையத்தில் ரத்ததான முகாம் நடந்தது.
நடிகர் விஜய் பிறந்த நாள் விழா இன்று தமிழகம் முழுவதும் அவரது ரசிகர் மன்றம் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடிகர் விஜய் பிறந்த நாளையொட்டி விஜய் மக்கள் இயக்க தொகுதி பொறுப்பாளர் சக்திவேல் தலைமையில் ரத்ததான முகாம் ராமர் கோவில் மண்டபத்தில் நடந்தது.
குமாரபாளையம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்தியா, மக்கள் நீதி மய்யம் மகளிரணி செயலாளர் சித்ரா முகாமை துவக்கி வைத்தனர். இதில் 75க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினர். ரத்ததானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரெயின்கோட் வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் ரமேஷ், சாந்தி, வேல்முருகன், கார்த்திக், பாஸ்கரன், ராமு, விஜய்மணி, பழனி, சரவணன், வடிவேல், செல்லப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் சித்ரா பேசும்போது தளபதி விஜய் சமீபத்தில் அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியர்களை ஒருங்கிணைத்து, பெற்றோர்கள் முன்பு பாராட்டி பரிசு வழங்கினார். இது அவர்களுக்கு பெரும் ஊக்கத்தை கொடுத்துள்ளது. அரசு செய்ய வேண்டிய பணியை மனிதாபிமானத்துடன் விஜய் செய்ததை அனைத்து தரப்பினரும் பாராட்டி உள்ளனர். மக்கள் நீதி மய்யம் நிறுவனர் கமல் இது கண்டு பெருமிதம் கொண்டு பாராட்டியுள்ளார். விஜய் போன்ற பிரபலங்கள் மாணவ, மாணவியரை இது போல் ஆண்டுதோறும் ஊக்கப்படுத்தினால், மாணவ, மாணவியர் இன்னும் அதிகம் சாதனைகள் செய்வார்கள் என்றார்.