குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சேவை சங்கம் சார்பில் வள்ளலார் பிறந்த நாள் விழா

குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சேவை சங்கம் சார்பில் வள்ளலார் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.;

Update: 2024-01-28 11:27 GMT

குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் வள்ளலார் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சேவை சங்கம் சார்பில் வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறிய வள்ளலாரின் பிறந்த நாள் விழா குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சேவை சங்கம் சார்பில் கொண்டாடப்பட்டது. குமாரபாளையம் பஸ் நிலையத்தில்  நடந்த இந்த விழாவில் அமைப்பாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். வள்ளலார் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

பஸ் நிலைய வளாகத்தில் இருந்த யாசகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆதரவற்றோர் மையங்களுக்கு அரிசி மூட்டைகள் வழங்கப்பட்டன.நந்தகுமார், சண்முகம், சூர்யா, கோபாலகிருஷ்ணன், நஞ்சப்பன், ரவி உள்பட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சேவை சங்கம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சேவை சங்கம் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. தி.மு.க. முன்னாள் நகர துணை செயலாளர் ரேவதி, அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை சுகந்தி, சமூக சேவகி சித்ரா, இல்லம் தேடி கல்வி ஜமுனா, சித்ரா ஆகியோர் குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தனர். 60-க்கும் மேற்பட்ட தனியார் வேலை வாய்ப்பு நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களுக்கு தேவைப்படும் ஆட்களை தேர்வு செய்ய நேர்முகத் தேர்வை நடத்தினர். 400-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். தேர்வு செய்யப்பட்ட 154 பயனாளிகளுக்கு பணி ஆணைகளை விடியல் ஆரம்பம் நிறுவனர் பிரகாஷ், தொழிலதிபர் கோபாலகிருஷ்ணன், பஞ்சாலை சண்முகம், ரெயின்போ கணேஷ்குமார், தீனா ஆகியோர் வழங்கினார்கள்.

Tags:    

Similar News