குமாரபாளையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கலந்தாய்வுக் கூட்டம்

குமாரபாளையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-08-25 16:15 GMT

 குமாரபாளையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் மாநில பொது செயலர் பச்சமுத்து பேசினார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வருவதையொட்டி அனைத்து அரசியல் கட்சியினரும் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி  வருகின்றன.

காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் செல்வகுமார், நகர தலைவர் ஜானகிராமன் ஆகியோர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் மாநில பொது செயலரும், மேலிட பார்வையாளருமான பச்சமுத்து பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார். குமாரபாளையம், பள்ளிபாளையம் நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்று கட்சியின் வளர்சிக்கும், உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றுவது குறித்தும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில பொது செயலர் பச்சமுத்து கூறியதாவது:

மாநில செயலர் அழகிரி என்னை இந்த தொகுதிக்கு பொறுப்பாளராக நியமித்தார்கள். வட்டார, நகர, பேரூராட்சி நிர்வாகிகள் இந்த கூட்டத்திற்கு வந்துள்ளனர்.

ஒவ்வொருவரும் கூறிய கருத்துகள் ஏற்றுக்கொண்டோம். இதனை மேலிடத்தில் சொல்லி, நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சி மாநில அளவில் முதலிடம் பெறும் வகையில் செயலாற்றுவோம்.

60 ஆண்டுகளாக காங்கிரஸ் உருவாக்கிய சொத்துக்களை  மத்திய அரசு விற்றுகொண்டுள்ளது. இந்த செயலை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நிர்வாகிகள், மாநில செயலர் ஜெயபால், மாவட்ட தலைவர் செல்வகுமார், முன்னாள் மாவட்ட தலைவர் தனகோபால், சிவராஜ், சுப்பிரமணி, தாமோதரன், மோகன்வெங்கட்ராமன், சிவகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News