குமாரபாளையம் விடியல் ஆரம்பம் அமைப்பு சார்பில் உலக எழுத்தறிவு நாள்
World Literacy Day - குமாரபாளையம் விடியல் ஆரம்பம் அமைப்பு சார்பில் உலக எழுத்தறிவு நாள் கொண்டாடப்பட்டது.;
World Literacy Day - குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் உலக எழுத்தறிவு நாள் கொண்டாடப்பட்டது. மாவட்ட இல்லம் தேடி கல்வி அமைப்பு, குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் நாராயண நகர் இல்லம் தேடி கல்வி மையத்தில் உலக எழுத்தறிவு நாள் அமைப்பாளர் மற்றும் இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது. மாணவ, மாணவியர்களுக்கு அழகாக எழுதும் போட்டி வைக்கப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகங்கள், பங்கேற்றவர்களுக்கு நோட்டுகள், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை தன்னார்வலர் அஞ்சுகம் வழங்கினார். இதில் பெற்றோர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2