குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் ஆசிரியர் தினவிழா, வ.உ.சி. பிறந்த நாள் விழா

குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் ஆசிரியர் தினவிழா, வ.உ.சி. பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2021-09-05 14:45 GMT

குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் ஆசிரியர் தினவிழா, வ.உ.சி. பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

டாக்டர் இராதகிருஷ்ணன் பிறந்தநாளை ஆசிரியர் தினமாக ஆண்டுதோறும் செப். 5ல் கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று ஆங்கிலேயர்களுக்கு எதிராக கப்பல் ஓட்டிய தமிழரும், இந்திய விடுதலைக்காக செக்கிழுத்த செம்மலுமான வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள் நேற்று குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது.

இருவரது திருவுருவப்படத்திற்கு மாலைகள் அணிவித்து மரியாதையை செலுத்தப்பட்டது. மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசாக புத்தகங்கள், சான்றிதழ்களை சீனவாசன் வழங்கினார்.

மாணவ மாணவிகளுக்கு முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி வழங்கப்பட்டு கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. சௌமியா இனிப்பு வழங்கினார். இதில் உதவிகரம் அங்கப்பன்,விக்னேஷ்,கோமதி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News