குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் சார்பில் பேச்சு, கட்டுரை போட்டி

குமாரபாளையத்தில் தளிர்விடும் பாரதம் சார்பில் பேச்சு, கட்டுரை போட்டி நடந்தது.;

Update: 2023-04-23 10:15 GMT

குமாரபாளையத்தில் தளிர்விடும் பாரதம் சார்பில் நடந்த 11ம் ஆண்டு விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

குமாரபாளையத்தில் தளிர்விடும் பாரதம் சார்பில் பேச்சு, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

குமாரபாளையத்தில் தளிர்விடும் பாரதம்  அமைப்பின் சார்பில் 11ம் ஆண்டு விழா அமைப்பாளர் சீனிவாசன் தலைமையில் நடந்தது. இதில் நகரில் உள்ள 7 அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கோடை காலத்தில் நான் என்ற தலைப்பில் பேச்சுபோட்டி, தண்ணீர் சிக்கனம் என்ற தலைப்பில் ஓவியப்போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு டாக்டர் நடராஜன், மக்கள் நீதி மய்யம் நகர மகளிரணி அமைப்பாளர் சித்ரா, தொழிலதிபர் மகேந்திரன், ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் வினோத்குமார், ஓவியர் சசிகுமார், தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியர் ஸ்ரீகாந்த், ஆகியோர் புத்தகங்கள் பரிசாக வழங்கி பாராட்டினர். உலக புத்தக தினத்தையொட்டி புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நடந்தது. நிர்வாகி பிரபு புத்தகம் வாசிக்க, மாணவ, மாணவியர் அதனை பின்பற்றி வாசித்தனர். நிர்வாகி வரதராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் சார்பில் மன அழுத்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தேசிய மன அழுத்த வாரத்தையொட்டி குமாரபாளையம் தளிர்விடும் பாரதம் பொதுநல அமைப்பின் சார்பில் மன அழுத்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அமைப்பாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இதனை செயலாளர் பிரபு பள்ளி மாணவ, மாணவர்களிடையே எடுத்துரைத்தார்.

அப்போது பிரபு பேசும்போது மன அழுத்தம் குறைக்க ஆழமான சுவாச பயிற்சிகள், தியானம், போதுமான தூக்கம் ஆகியவற்றால் எளிமையாக குறைக்க முடியும் என்றார்.

நிர்வாகிகள் சரண்யா, செல்வராணி, மகேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

குமாரபாளையத்தில் தளிர்விடும் பாரதம் சார்பில் உலக தண்ணீர் தினம் விழா கொண்டாடப்பட்டது. 1993ம் ஆண்டு முதல் மார்ச் 22ல் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நீர் வளத்தை காக்கவும், நீர் வளம் பெருக்கவுமான விழிப்புணர்வு நிகழ்ச்சியாக உலக தண்ணீர் தினம் தளிர்விடும் பாரதம் சார்பில் தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் தளிர்விடும் பாரதம் சார்பில் நடந்த 11ம் ஆண்டு விழாவில் உலக புத்தக தினத்தையொட்டி புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் செயலாளர் செயலர் பிரபு கூறியதாவது:-

பூமியில் 30 சதவீதம் நிலப்பரப்பு. மீதம் 70 விழுக்காடு நீர்பரப்புதான். ஆனால் இன்று 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்கு தேவையான நீரை வழங்க, பூமி தன் தன்மையை இழந்து வருகிறது. நாம் அன்றாடம் செய்யும் வேலையின் போது தண்ணீர் சேமிப்புக்கு வழி வகுக்கலாம். உதாரணமாக, பல் துலக்கும் போது குடிநீர் குழாயை அடைத்து விட்டு பல் துலக்கலாம். இதன் மூலம் நிமிடத்திற்கு 6 லிட்டர் தண்ணீர் சேமிக்க முடியும். தண்ணீர் குழாயை பயன்படுத்திய பின், குழாயை அடைத்து விட வேண்டும். நாம் வழியில் வீணாக திறந்திருக்கும் குழாய்களை பார்த்தால் உடனே குழாயை அடைக்க வேண்டும். தண்ணீர் தொட்டிக்கு தண்ணீர் நிரப்பும் போது, நிரம்பி வழியாத வகையில் தண்ணீரை உரிய நேரத்தில் நிறுத்த வேண்டும். புதியதாக வீடுகட்டும்போது, மழைநீர் சேமிப்பு தொட்டி கட்டி, தண்ணீர் சேமிக்க வழி ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் தண்ணீர் தேவையை, தண்ணீர் சிக்கனத்தை மனதில் வைத்து ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உலக தண்ணீர் தினம் குறித்த பேச்சு, கட்டுரை போட்டிகள் வைக்கப்பட்டு மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிர்வாகிகள் சரண்யா உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News