குமாரபாளையத்தில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆலோசனை கூட்டம்
குமாரபாளையத்தில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.;
குமாரபாளையத்தில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது
குமாரபாளையத்தில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் ஆதிசேஷன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
குமாரபாளையத்தில் நாமக்கல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அதிக உறுப்பினர்கள் சேர்த்தல், நகரம் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு விளையாட்டு பயிற்சி வழங்குதல், அதற்காக மாவட்ட, மாநில அளவிலான கிரிக்கெட், வாலிபால் உள்ளிட்ட போட்டிகள் நடத்துவது, ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.
இந்த கூட்டம் குறித்து மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
குமாரபாளையத்தில் காங்கிரஸ் சார்பில் இரு அணிகளாக காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. குமாரபாளையம் நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக மகாத்மா காந்தி பிறந்தநாள் விழாவும், இந்தியாவின் இரண்டாவது பாரத பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாள் விழாவும், காமராஜர் அவர்களின் நினைவு தினமும் நடைபெற்றது. குமாரபாளையம் நகர காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஜானகிராமன் தலைமை வகித்தார். நகர காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று, நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியடிகளின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிர்வாகிகள் முன்னாள் நகர தலைவர் மோகன்வெங்கட்ராமன், சுப்ரமணி உள்பட பலர் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.
குமாரபாளையம் காங்கிரஸ் சார்பில் நகர துணை தலைவர் சிவகுமார் தலைமையில் காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கட்சி அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக நகராட்சி அலுவலகம் சென்று, நகராட்சி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் கோகுல்நாத், மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஆதிசேசன், நெசவாளர் அணி மாநில செயலர் விஸ்வநாதன், மாவட்ட பிரதிநிதி மாரிமுத்து உள்பட பலர் பங்கேற்றனர்.
நகரில் முன்னணி அரசியல் கட்சியினர் இது போல் இரு பிரிவுகளாகத்தான் செயல்பட்டு வருகிறார்கள். கட்சியினரிடையே ஒற்றுமை இல்லாமல் இருப்பது கூடாது. ஒற்றுமை கடைப்பிடிக்க முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.