ஒளிரும் போர்டுகளை மறைத்து பேனர்கள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

குமாரபாளையத்தில் ஒளிரும் போர்டுகளை மறைத்து பேனர்கள் வைப்பதால், விபத்துக்களை தடுக்க பேனர்கள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2025-05-12 14:37 GMT

ஒளிரும் போர்டுகளை மறைத்து பேனர்கள்

நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


குமாரபாளையத்தில் ஒளிரும் போர்டுகளை மறைத்து பேனர்கள் வைப்பதால், விபத்துக்களை தடுக்க பேனர்கள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமாரபாளையம் சேலம் சாலையில், பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, ராஜம் தியேட்டர், காவேரி நகர் புதிய பாலம் பிரிவு உள்ளிட்ட பகுதியில் டிவைடர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த டிவைடர்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில், டிவைடர்கள் தொடங்கும் இடங்களில், விபத்தினை தடுக்க, ஒளிரும் போர்டுகள் நெடுஞ்சாலைத்துறையினரால் வைக்கப்படுள்ளது. இந்த போர்டை மறைக்கும் விதமாக, பெரும்பாலான நபர்கள், இது போன்ற முக்கியமான இடங்களில், கண்ணீர் அஞ்சலி பிளெக்ஸ் பேனர்கள், தொழில் நிறுவன பேனர்கள் வைத்து, ஒளிரும் போர்டுகளை மறைத்து விடுகின்றனர். இரவு நேரங்களில் ஒளிரும் போர்டு தெரியாததால், வாகன ஓட்டிகள் டிவைடர்கள் மீது மோதி, விபத்து ஏற்பட்டு, பலரும் பாதிக்கப்படும் நிலை உருவாகி வருகிறது. இதனை தடுக்க, ஒளிரும் போர்டுகள் மீது, கண்ணீர் அஞ்சலி பிளெக்ஸ் உள்ளிட்ட இதர பிளெக்ஸ் வைப்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படவிளக்கம் : 

குமாரபாளையத்தில் ஒளிரும் போர்டுகளை மறைத்து பேனர்கள் வைப்பதால், விபத்துக்களை தடுக்க பேனர்கள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News