உடல்நலம் குன்றியதால் மரணமடைந்த தேவூர் காவல்உதவி ஆய்வாளர்
குமாரபாளையம் அருகே உடல்நலமின்றி இருந்த தேவூர் எஸ்.ஐ. மரணம்
குமாரபாளையம் அருகே உடல்நலமின்றி இருந்த தேவூர் எஸ்.ஐ. உயிரிழந்தார்.
குமாரபாளையம் அருகே தேவூர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.யாக பணியாற்றி வந்தவர் குணசேகரன்(,57.). நாமக்கல் கணேச புரத்தை சேர்ந்தவர். 1985, டிச. 23ல் பணியில் சேர்ந்து, 2020, டிச. 30ல் தேவூர் எஸ்.ஐ.ஆக பணியில் சேர்ந்தார். இவருக்கு உடல் நலமில்லாத காரணத்தால் ஆக. 25ல் விடுப்பில் சென்றவர், கோவை கிட்னி சென்டர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மீண்டும் வீடு திரும்பியவர் ஆக. 26ல் அக்சயா மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். இவருக்கு கல்பனாதேவி( 50,) என்ற மனைவி, பிரதீப்( 30,), சூர்யா( 24,) என்ற இரு மகன்கள் உள்ளனர். இவரது மரணம் போலீசார் மற்றும் தேவூர் மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.