குமாரபாளையம் காவிரி ஆற்றில் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

குமாரபாளையம் அருகே காவிரி ஆற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்தார்.;

Update: 2024-08-06 13:30 GMT

கருப்பாயி.

குமாரபாளையம் அருகே உள்ள சின்னப்ப நாயக்கன்பாளையம் மேட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் முதாட்டி கருப்பாயி (வயது 75 ).இவரது கணவர் பழனியப்பன்(வயது 80.). இவர் உடலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் தனது மகனுடன் வசித்து வந்த கருப்பாயி, நேற்று காலை 06:30 மணியளவில் வழக்கம்போல் வீட்டை கூட்டி, வீட்டில் இருந்த குப்பைகளை எடுத்துக்கொண்டு காவிரி ஆற்றின் அருகில் கொட்ட வந்துள்ளார்.

அப்பொழுது ,தான் கொண்டு வந்த குப்பையை கொட்டி விட்டு திரும்பும் பொழுது எதிர்பாராத விதமாக காவிரியாற்றில் தவறி விழுந்தார். நீரோட்டம் இப்பொழுது அதிகமாக உள்ளதால் இதில் அடித்துச் செல்லப்பட்ட அவர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், கலைமகள் வீதியில் உள்ள பொன்னியம்மன் சந்து உடற்பயிற்சி நிலையம் அருகில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் தீயணைப்புத் துறையின் உதவியுடன் வந்து சடலத்தை மீட்டு கருப்பாயியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குமார பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவிரி ஆற்றில் தவறி விழுந்து மூதாட்டி இறந்த தகவலை அறிந்த வட்டாட்சியர் சிவகுமார் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் விசாரணை மேற்கொண்டதுடன், அந்தப் பகுதியில் உடனடியாக யாரும் செல்லாத வண்ணம் தடுப்பு வேலிகளை அமைத்து, அந்தப் பகுதிக்கு யாரும் செல்லக்கூடாது என அறிவுறுத்தினார். காவிரி ஆற்றில் மூதாட்டி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News