பாத்ரூமில் வழுக்கி விழுந்து மூதாட்டி பலி
குமாரபாளையத்தில் பாத்ரூமில் வழுக்கி விழுந்து மூதாட்டி பலியானார்.;
பாத்ரூமில் வழுக்கி விழுந்து
மூதாட்டி பலி
குமாரபாளையத்தில் பாத்ரூமில் வழுக்கி விழுந்து மூதாட்டி பலியானார்.
குமாரபாளையம் நடராஜா நகரில் வசித்து வருபவர் சரோஜினி, 86. நேற்றுமுன்தினம் காலை 07:30 மணியளவில் வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றார். அப்போது வழுக்கி விழுந்ததில் தலையில் அடிபட்டு மயங்கி விழுந்தார். இவரை ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இவர் சிகிச்சை பலனின்றி மாலை 04:10 மணியளவில் இறந்தார். இது குறித்து இவரது மகன் ராஜேந்திரன், 64, புகார் கொடுக்க, குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.