குமாரபாளையம் இறைச்சிக்கடைகளில் உணவுப்பொருள் அதிகாரிகள் ஆய்வு

குமாரபாளையத்தில் உள்ள மீன் இறைச்சி கடைகளில் உணவுப்பொருள் அதிகாரிகள், இன்று திடீர் ஆய்வு செய்தனர்.;

Update: 2021-10-03 08:15 GMT

 குமாரபாளையம் பகுதியில், மீன் இறைச்சி கடைகளில் உணவுப்பொருள் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மீன் இறைச்சி கடைகளில், உணவுப்பொருள் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

குமாரபாளையம் பகுதியில் உள்ள மீன் இறைச்சி கடைகளில்,  பழைய இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து, மாவட்ட நியமன அலுவலர் அருண் தலைமையில், குமாரபாளையம் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து, அருண் கூறியதாவது: குமாரபாளையம் மீன் இறைச்சிக்கடைகளில், பழைய இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மீன் இறைச்சி 7 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அதே இடத்தில் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், பழைய மீன் இறைச்சி 7 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அவை அழிக்கப்பட்டன. 3 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இறந்த உடல் கெட்டுபோகாமல் இருக்க பயன்படுத்தப்படும் பார்மலின் ரசாயனம் மீன்களில் செலுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. விதிமீறி செயல்பட்ட மற்றும் உரிமம் பெறாமல் மீன் விற்பனை செய்த 5 கடையினருக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் வகையில் நோட்டீஸ் வழங்கப்பட்டது என்றார். 

இந்த ஆய்வின் போது, மீன்வளத்துறை அதிகாரிகள் வேலுசாமி, தமிழ்மணி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News