குமாரபாளையம்: சிமெண்ட் தரம் அறிய அதிகாரிகள் திடீர் ஆய்வு
குமாரபாளையம் அருகே மஞ்சுபாளையம் உள்ள நிறுவனத்தில், சிமெண்டின் தரம் அறிவதற்காக, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
சேலம் மாவட்டம் தேவூர் அருகே கத்தேரி ஊராட்சி, மஞ்சுபாளையம் பகுதியில் ஸ்ரீ குருநாதா பல்வரைசர் (சுகா சிமெண்ட்) சிமென்ட் கம்பெனி அமைந்துள்ளது. இங்கு, சேலம் மாவட்ட தொழில் மையம் உதவி பொறியாளர் ராஜேஸ்வரி, மற்றும் உணவு மற்றும் குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர், கோவை காவல் ஆய்வாளர் மேனகா ஆகியோர் தலைமையிலான குழுவினர், திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது, சிமெண்டின் தரத்தினை பரிசோதனையிடுவதற்கு, 30 கிலோ சிமெண்டை மகஜர் மூலம் கைப்பற்றி மாதிரியை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.