குமாரபாளையம் உயர் தொழில்நுட்ப நெசவு பூங்கா இடத்தில் ஆக்கிரமிப்பு
குமாரபாளையம் உயர் தொழில்நுட்ப நெசவு பூங்கா இடத்தில், ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் மீது மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.;
குமாரபாளையம் உயர் தொழில்நுட்ப நெசவு பூங்கா இடத்தில், ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே அருவங்காடு என்ற பகுதியில் குமாரபாளையம் உயர் தொழில்நுட்ப நெசவு பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காவிற்கு சொந்தமான இடத்தில் தனியார் ஆக்கிரமிப்பு செய்து, இடையூறு செய்து வந்தனர். இது குறித்து பல முறை பூங்கா நிர்வாகிகள் சொல்லியும், அவர்கள் விடுவதாக இல்லை. இதனால், மாவட்ட வருவாய் அலுவலர் சுமனிடம், பூங்கா நிர்வாகிகள் பலரும் நேரில் புகார் மனு கொடுத்து, ஆக்கிரமிப்பாளர்கள் வசமிருந்து, பூங்கா இடத்தை மீட்டுத் தருமாறு புகார் மனு கொடுத்தனர். இது குறித்து மாவட்ட கலெக்டரின் ஆலோசனைபடி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சுமன் கூறினார்.