ராஜீவ்காந்தியின் நினைவு நாள் அனுஷ்டிப்பு
குமாரபாளையம் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
ராஜீவ்காந்தியின் நினைவு நாள் அனுஷ்டிப்பு
குமாரபாளையம் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டது.
குமாரபாளையம் நகர காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33 வது ஆண்டு நினைவு தினம் பள்ளிபாளையம் பிரிவு சாலை நகர தலைவர் ஜானகிராமன் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது. ராஜீவ் காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலர்கள் தூவி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நகர காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகளும், நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகளும், 33 வார்டுகளைச் சார்ந்த தலைவர், பிரதிநிதிகளும், காங்கிரஸ் கட்சியின் துணை அமைப்புகளின் தலைவர் மற்றும் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
ராஜீவ்காந்தியின் தாயாரான பிரதமர் இந்திரா காந்தி 1984, அக்டோபர் 31 ஆம் நாள் சுட்டுக்கொல்லப்பட்டதன் பின், இந்தியப் பிரதமரானவர்.
இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும், அரசியல் மீது ஆர்வமில்லாது, விமான ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தாயார் இந்திரா காந்தியால், வாரிசாக வளர்க்கப்பட்டு வந்தவரெனக் கருதப்பட்ட இவரது தம்பியான சஞ்சய் காந்தி, விமான விபத்தொன்றில் காலமான பின்னர், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார். 1981ல் சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப் பிரதேசத்திலுள்ள, அமேதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1991, மே 21ல் அன்று திருப்பெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.