ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம்

ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.;

Update: 2023-09-02 05:00 GMT

நிகழ்வின் தலைப்பு : மாபெரும் இரத்ததான முகாம்

நம் உடலில் உள்ள ஒரே திரவ உறுப்பு இரத்தம். நீரின்றி அமையாது உலகு என்பதைப் போல நமது உடல் இரத்தம் இல்லாமல் செயல்படாது.

நிகழ்விடம் : செவிலியர் கல்லூரி ஆய்வகக் கூடம்

நிகழ்ச்சி நடந்த தேதி : ஆகஸ்ட் 30

நிகழ்ச்சி நடந்த நேரம் : காலை 10 மணி, புதன்கிழமை

தலைமை : முனைவர் வி.ஆர்.பரமேஸ்வரி

ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல்

கல்லூரிக் கல்வி புல முதன்மையர் (Dean)

முன்னிலை : ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி பொறுப்பு முதல்வர் எஸ்.மங்கையர்கரசி மற்றும் செவிலியர் கல்லூரி முதல்வர் ஆர்.ஜமுனாராணி முன்னிலையில்

வரவேற்புரை : திருமதி.எஸ்.பாரதி

திட்ட அலுவலர்

நாட்டு நலப்பணித்திட்டம்

சிறப்பு விருந்தினர் :

திரு.S.ஸ்ரீ ஓம் சரவணா,

நிர்வாக இயக்குநர், ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனங்கள்

தலைமை உரை :

முனைவர் வி.ஆர்.பரமேஸ்வரி

ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல்

கல்லூரிக் கல்வி புல முதன்மையர் (Dean)

சிறப்பு விருந்தினர் உரை : திரு.S.ஸ்ரீ ஓம் சரவணா, ஜே.கே.கே.நடராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் நிர்வாக இயக்குனர்

பங்குபெற்றோர் விபரம் : ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பிற கல்லூரி மாணவர்கள்

நிகழ்வின் முக்கியத்துவம்

இன்றைய சமுதாயத்தில் இரத்ததானம் பற்றியும் அதன் அவசியமும் தெரியாத சூழ்நிலை இருந்து வந்தன. இச்சூழ்நிலையை மாற்ற மாணவர்களுக்கு இரத்ததான பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த இரத்ததானம் முகாம் நடத்தப்பட்டன.

ஒருவர் தனது இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும்.

ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200, 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு இரண்டே வாரங்களில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும்.

3 மாதங்களுக்கு ஒரு முறை எந்த வித பாதிப்பும் இன்றி இரத்த தானம் செய்யலாம். இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும். உடலில் உள்ள ஒவ்வொரு இரத்த அணுவும் மூன்று மாத காலத்தில் தானாகவே அழிந்து மீண்டும் உற்பத்தியாகிறது.

இரத்த அணு உற்பத்தி என்பது உடலில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் பணி. எனவே இரத்த தானம் செய்வதால் உடலுக்கு பாதிப்போ, பலவீனமோ ஏற்பட வாய்ப்பில்லை. இனிவரும் காலங்களில் மாணவர்கள் முன்வந்து இரத்ததானம் செய்யவார்கள்.

நன்றியுரை :

திரு.எஸ்.பாலாஜி

திட்ட அலுவலர்

நாட்டு நலப்பணித்திட்டம்

Tags:    

Similar News