மர அறுவை இயந்திரத்தில் சிக்கி வடமாநில தச்சு தொழிலாளி உயிரிழப்பு
குமாரபாளையத்தில் மர அறுப்பு இயந்திரத்தில் சிக்கி வட மாநில தச்சு தொழிலாளி உயிரிழந்தார்.;
குமாரபாளையத்தில் மர அறுப்பு இயந்திரத்தில் சிக்கி தச்சு தொழிலாளி உயிரிழந்தார்.
உத்திரபிரதேச மாநிலம் மகாராஜ் ஹஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ராம்வம்சன் விஷ்வகர்மா (வயது 59.) கட்டிட தச்சு தொழிலாளி. குமாரபாளையம் காவேரி நகர், புத்துக்கண் வீதியில் புதிய வீடு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதில் உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த பவிந்தர் என்பவர் ஆட்களை வைத்து கட்டிட வேலைகளை செய்து வருகிறார். இவரிடம் ஆகாஷ், மனோஜ், ராம்வம்சன் விஷவ்கர்மா ஆகியோர் தச்சு வேலை செய்து வந்தார்கள்.
ராம்வம்சன் விஷ்வ கர்மா கதவு இழைக்கும் இயந்திரத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கை தவறி இடது கால் முதல், தொடை பகுதி வரை மெசினில் சிக்கி சதை கிழிந்து விட்டது. இவரது அலறல் சத்தம் கேட்ட அங்கு பணியாற்றிய பலரும் ஓடி வந்து, தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். நரம்பு பகுதிகள் பாதிக்கப்பட்டதால் இவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.