கொட்டி தீர்த்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
குமாரபாளையத்தில் கொட்டி தீர்த்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது
குமாரபாளையத்தில் கொட்டி தீர்த்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
குமாரபாளையத்தில் சாலையோர கடைகள் உள்ளிட்ட இதர கடைகள் வழக்கம்போல் செயல்பட்டுக்கொண்டிருந்தது. வெயிலும் அடித்துக்கொண்டு இருந்தது. திடீரென வானில் கார்மேகங்கள் சூழ்ந்து, நேற்று காலை 09:00 மணி முதல் மழை கனமாகவும், அவ்வப்போது லேசாகவும் மாலை வரை நீடித்தது. இதனால் சாலையோர கடை வியாபாரிகள் உள்ளிட்ட பலரும், பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களும் அவதிக்கு ஆளாகினர். சாலைகளில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. கோம்பு பள்ளத்தில் அதிக அளவில் மழை நீர் சென்றது. சேலம் கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதனால் இரண்டு சர்வீஸ் சாலைகளை இணைக்கும் விதமாக யூ டர்ன் பகுதி அமைக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் இந்த பகுதி முழுதும் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. அதிக வாகனங்கள் இதில் சாலையை கடக்க பயன்படுத்துவதால், சேறும் சகதியுமாக இருப்பதால் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. இதனால் இந்த இணைப்பு சாலை பகுதியை தார் சாலையாக மாற்றி, பொதுமக்களை விபத்து அபாயத்திலிருந்து மீட்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணி நடந்து வருவதால், இரண்டு சர்வீஸ் சாலைகளை இணைக்கும் விதமாக அமைக்கப்பட்ட யூ டர்ன் பகுதியில் தொடர் மழையால் சேறும் சகதியுமாக மாறியுள்ளது.
ஈரோடு, நாமக்கல் மாவட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள். நமது குழுவில் இணையுங்கள். Click Now