குமாரபாளையத்தில் வரி செலுத்தாத கடைகளுக்கு நாளை சீல்: ஆணையாளர் தகவல்

குமாரபாளையத்தில் வரி செலுத்தாத கடைகளுக்கு நாளை சீல் வைக்கப்படும் என ஆணையாளர் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-03-28 12:00 GMT

சசிகலா, ஆணையாளர், குமாரபாளையம்.

குமாரபாளையத்தில் மார்ச் 30ல் முதல் நகரமன்ற கூட்டம் நடைபெறும் எனவும்,வரி செலுத்தாத கடைகளுக்கு நாளை மார்ச் 29ல் சீல் வைக்கப்படும் எனவும் - ஆணையாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

குமாரபாளையம் நகராட்சியில் ரகுராமன், சுயம்பிரபா மாணிக்கம், ஜெகநாதன், சேகர், தனசேகரன் ஆகிய 5 பேர் நகராட்சி தலைவர்களாக பொறுப்பு வகித்தவர்கள். இதில் முதல் நான்கு பேர் தி.மு.க.வை சேர்ந்தவர்கள். தனசேகரன் சுயேட்சையாக போட்டியிட்டு, வெற்றி பெற்று அ.தி.மு.க.வில் இணைந்து, 2011, அக். 25, முதல் 2016, அக். 24 வரை சேர்மனாக பொறுப்பு வகித்தார். 2022ல் நடைபெற்ற தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் விஜய்கண்ணன் நகராட்சி தலைவராக வெற்றி பெற்றுள்ளார். 2022 நகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற குழுவினரின் முதல் நகர்மன்ற கூட்டம் மார்ச் 30ல் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில், சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இது பற்றி ஆணையாளர் கூறியதாவது:- குமாரபாளையம் நகராட்சி 2022 உள்ளாட்சி தேர்தலுக்கு பின் மார்ச்.30 காலை 11 மணியளவில் முதல் நகரமன்ற கூட்டம் நடைபெறவுள்ளது. குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் மார்ச் 31ல் நியமனக்குழு உறுப்பினர் தேர்தல், ஒப்பந்தக்குழு உறுப்பினர் தேர்தல் மற்றும் வரி மேல்முறையீடு குழு தேர்தல் ஆகியவை நடைபெறவுள்ளது. குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட 9 கடைகள் காலியாக உள்ளன. அவைகள் முறைப்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குமாரபாளையம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்கள் செலுத்த இன்று (மார்ச் 28) இறுதி நாள் என அறிவிக்கப்பட்டது. இதன் பின்பும் வரி செலுத்தாத கடைகளுக்கு நாளை (மார்ச் 29ல்) சீல் வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News