குமாரபாளையம் அரசு பள்ளியில் தரமற்ற சத்துணவு: சேர்மன் ஆய்வு
குமாரபாளையத்தில் தரமற்ற சத்துணவு வழங்குவதாக மாணவர்கள் புகார் தெரிவித்ததால் சேர்மன் ஆய்வு செய்தார்.;
குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி சத்துணவு கூடத்தில் சேர்மன் விஜய்கண்ணன் ஆய்வு செய்தார்.
குமாரபாளையத்தில் தரமற்ற சத்துணவு வழங்குவதாக மாணவர்கள் புகார் தெரிவித்ததால் சேர்மன் ஆய்வு செய்தார்.
குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தரமற்ற சத்துணவு வழங்குவதாக மாணவர்கள் கவுன்சிலர் வேல்முருகனிடம் புகார் தெரிவித்தனர். கவுன்சிலர் வேல்முருகன் பள்ளிக்கு சென்று சத்துணவு சமைக்கும் பணியாளர்களிடம் இது பற்றி கேட்டு, பட்டியலில் உள்ளபடி சமைப்பது, சுவையாக சமைப்பது இல்லை என்பது தெரியவந்தது. தினமும் பட்டியலில் உள்ளபடி, சமைக்கவும், சுவையாக சமைக்கவும் அறிவுறுத்தினார்.
இது குறித்து நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் இந்த பள்ளியில் நேரில் ஆய்வு செய்து, சமையல் பொருட்கள் இருப்பு பதிவேட்டை பார்வையிட்டார். மாணவர்களுக்காக சமைத்த உணவை, சேர்மனுடன் கவுன்சிலர்கள் சிலரும் உண்டு ஆய்வு செய்தனர். இனி மேல் இது போல் புகார் வரும் வகையில் செயல்பட வேண்டாம் என சேர்மன் எச்சரித்தார். கவுன்சிலர்கள் வேல்முருகன், அழகேசன், தர்மராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.