காற்றில் பறந்த மகாவீர் ஜெயந்தி விதிமுறை..! வழக்கம்போல் இயங்கிய இறைச்சி கடைகள்..!

குமாரபாளையத்தில் மகாவீர் ஜெயந்தி விதிமுறை காற்றில் பறக்க விட்டு, நகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் எச்சரித்தும் வழக்கம்போல் இறைச்சி கடைகள் செயல்பட்டன.;

Update: 2024-04-22 04:04 GMT

குமாரபாளையத்தில் மகாவீர் ஜெயந்தி விதிமுறை மீறி, நகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் எச்சரித்தும் வழக்கம்போல் இறைச்சி கடைகள் செயல்பட்டன.

காற்றில் பறக்க விட்ட மகாவீர் ஜெயந்தி விதிமுறை :வழக்கம்போல் செயல்பட்ட இறைச்சி கடைகள்

குமாரபாளையத்தில் மகாவீர் ஜெயந்தி விதிமுறை காற்றில் பறக்க விட்டு, நகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் எச்சரித்தும் வழக்கம்போல் இறைச்சி கடைகள் செயல்பட்டன.

இது குறித்து சுகாதார அலுவலர் ராமமூர்த்தி கூறியதாவது:


மகாவீர் ஜெயந்தியையொட்டி ஆண்டுதோறும் இதே நாளில் இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி இல்லை. இது குறித்து நகரில் உள்ள அனைத்து இறைச்சி கடை உரிமையாளர்களிடம் சொல்லி எச்சரித்து வந்தோம். இதனையும் மீறி பல கடையினர் இறைச்சி வியாபாரம் செய்து வந்துள்ளனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

குமாரபாளையத்தில் புதுப்பிக்கப்பட்ட அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டது.

குமாரபாளையம் காவேரி நகர் பகுதியில் 3.30 ரூபாய் லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் புதுப்பிக்கப்பட்டது. இதன் திறப்பு விழா பொறியாளர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். விஜய்கண்ணன் பேசியதாவது:

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நாங்கள் பார்த்து கொள்வோம் என்றுதான் நம்பி, இங்கு கொண்டு வந்து விட்டு செல்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை வீணாகாமல், குழந்தைகளை பணியாளர்கள் தங்கள் பிள்ளைகள் போல் பாவித்து, அன்புடன் கவனித்துக் கொள்ள வேண்டும். பள்ளிக்கு செல்லும் முன், பாடங்களை எடுத்து சொல்லி, நன்கு கல்வி பயில வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. கவுன்சிலர்கள் கிருஷ்ணவேணி, செல்வராஜ், வேல்முருகன், ஜேம்ஸ், நகராட்சி துணைத் தலைவர் வெங்கடேசன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வித்யலட்சுமி, நகர மன்ற உறுப்பினர் ஜேம்ஸ், பொறுப்புக் குழு உறுப்பினர் ராஜ்குமார், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், வார்டு செயலாளர் கோவிந்தன், மற்றும் விக்னேஷ், மகளிர் அணி ஜோதி, அங்கன்வாடி பணியாளர்கள் குணசுந்தரி, விஜயா மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News