அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் நவரத்தின விழா
நாமக்கல் மாவட்ட அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் நவரத்தின விழா நடந்தது.;
நாமக்கல் மாவட்ட அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் நவரத்தின விழா நடந்தது.
நாமக்கல் மாவட்ட அகில பாரத ஐயப்பா சேவா சங்கம், சிங்களாந்தபுரம் கிளை, சிங்களாந்தபுரம் கடைவீதி புதிய கிளை சார்பில் மாவட்ட தலைவர் பிரபு, மாவட்ட செயலர் ஜெகதீஷ் தலைமையில் நவரத்தின விழா ராசிபுரம், போடிநாயக்கன்பட்டி ஸ்ரீ விக்னேஷ் மகாலில் நடந்தது.
சபரிமலை மகரவிளக்கு காலங்களில் உயிர்காக்கும் சேவையில் பணியாற்றிய பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் விருதுகளை மத்திய துணை தலைவர், சரக செயலர், திருச்சி மாவட்ட செயலர் ஸ்ரீதர் வழங்கி பாராட்டினார். புதிய கிளைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
90 கிளைகளின் படிவங்களை முழுமையாக வடிவமைத்த தேர்தல் அலுவலர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. சிங்களாந்தபுரம் கிளை 25ம் ஆண்டு வெள்ளிவிழா கொண்டாடப்பட்டது. சிங்களாந்தபுரம் புதிய கிளை நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். மாவட்ட நிர்வாகிகள் தேர்தலை தேர்தல் அலுவலர்கள் சென்னையை சேர்ந்த பெருமாள், பாண்டுரங்கன், சாய்ராமன் பங்கேற்று நடத்தினர். நாமக்கல் மாவட்ட சங்க தலைவராக பிரபு, செயலாளராக ஜெகதீஷ், பொருளாளராக செங்கோட்டையன் உள்பட பலர் தேர்வு செய்யப்பட்டனர். முன்னதாக மத்திய மாநில துணைத் தலைவர் பாலசுப்ரமணியம் சங்க கொடியேற்றி வைத்தார்.
இந்த விழாவில் மத்திய துணைத்தலைவர், சரக செயலாளர் ஸ்ரீதர் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்ட அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் பல்வேறு சேவைப்பணிகள் செய்து வருகிறோம். கல்வி உதவித்தொகை வழங்குதல், இலவச மருத்துவ முகாம் நடத்துதல், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட சங்கங்களின் தேர்தல் நிறைவு பெற்று, தற்போது நாமக்கல் மாவட்ட தேர்தல் நடந்து வருகிறது. நாமக்கல் மாவட்ட கிளைகள் அனைத்தும் சிறப்பாக நடந்து வரும் கிளைகள் ஆகும். அவர்களை கவுரவிக்கும் வகையில் இங்கு மாநிலத்தின் பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் வந்துள்ளனர். மதுரையில் முதியோர் இல்லம் நடத்தி வருகிறோம். அங்கு கோ சாலையும் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் நடத்தி வருகிறோம். சபரிமலை மட்டுமில்லாது, தமிழகத்தில் உள்ள கோவில் விஷேசங்களில் அன்னதானம், நீர் மோர் வழங்குதல் ஆகிய சேவைகளை செய்து வருகிறோம். எந்த விளம்பரமும் இல்லாமல், எந்த பிரதிபலனும் பாராமல் சேவை செய்து வரும் இயக்கம் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் ஆகும். சபரிமலையில் அன்னதானம் நாங்கள் செய்ய தேவசம் போர்டு தடை போட்டுள்ளனர். இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம். தேவசம் போர்டு துவங்கும் முன்பே, அகில பாரத ஐயப்ப சேவா சங்கம 1948ல் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் ஆகும். வரும் விழாக் காலங்களில் மீண்டும் அன்னதானம் செய்ய நீதிமன்ற உத்தரவு கிடைக்கும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் பல மாவட்ட கிளைகளை சேர்ந்த சாரங்கபாணி, இளங்குமார், ராமசாமி, ராமகிருஷ்ணன், அம்சராம், பாலன், பாலகிருஷ்ணன், திருமாவளவன், ரவிசந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.