குமாரபாளையம் தாலுகாவிற்கு புதிய தாசில்தார் நியமனம் : மாவட்ட ஆட்சியர்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகாவிற்கு புதிய தாசில்தார் நியமனம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.;
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் உத்தரவின்படி நாமக்கல் தாலுகா பகுதிகளில் செயல்பட்டு வந்த வருவாய் துறை தாசில்தார்கள் 20 பேர் இடமாற்றம் செய்யப்பuட்டுள்ளனர்.
அந்த உத்தரவின்படி குமாரபாளையம் தாலுகாவில் பணியாற்றி வந்த தாசில்தார் தங்கம் திருச்செங்கோடு ஆர்.டி.ஓ நேர்முக உதவியாளராக, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்செங்கோடு நிலமெடுப்பு தாசில்தார் தமிழரசி குமாரபாளையம் தாலுகாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.