ஜெய்ஹிந்த் நகரில் அமைக்கப்பட்ட புதிய மின் விளக்குகள்.
குமாரபாளையம் அருகே ஜெய்ஹிந்த் நகரில் புதிய மின் விளக்குகள் அமைக்கப்பட்டன.;
ஜெய்ஹிந்த் நகரில் அமைக்கப்பட்ட புதிய மின் விளக்குகள்.
குமாரபாளையம் அருகே ஜெய்ஹிந்த் நகரில் புதிய மின் விளக்குகள் அமைக்கப்பட்டன.
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சிக்குட்பட்ட ஜெய்ஹிந்த் நகர் உள்ளது. இங்கு 70க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஆங்காங்கே செடிகள், புதர்கள் உள்ளதால், விஷ ஜந்துகள் வருகின்றன. இதனால் பலரும் அடிக்கடி பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். வேலைக்கு சென்று இரவு நேரங்களில் வீடு திரும்புவோர், பள்ளி, கல்லூரி மற்றும் டியூசன் சென்று திரும்பும் மாணவ, மாணவியர்கள், மின் விளக்கு கம்பங்கள் அமைக்கப்படாததால் மிகுத்த அச்சத்துடன் வரும் நிலை ஏற்பட்டு வந்தது.
சிறிய வீடுகளில் உள்ளவர்கள் இரவு நேரங்களில் வீட்டின் வாசலில் பாய் போட்டும், கட்டில் போட்டும் படுத்து தூங்கினாலும், அச்சத்துடன் படுக்கும் நிலை இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் அச்சத்தை போக்க மின் விளக்கு கம்பங்கள் அமைத்து தர வேண்டி பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஊராட்சி நிர்வாகம், மின் வாரியத்தினர் இந்த பகுதியில் 6 மின் கம்பங்கள் அமைத்து தந்துள்ளனர். இதனால் இப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்ததுடன், ஊராட்சி நிர்வாகத்தினருக்கும், மின் வாரியத்தினருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.