குமாரபாளையத்தில் செல்போனில் நூதன லாட்டரி விற்பனை: ஒருவர் கைது
குமாரபாளையத்தில் செல்போன் மூலம் நூதன முறையில் லாட்டரி விற்பனை செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.;
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு மருத்துவமனை எதிரில் நூதன முறையில் செல்போன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருவதாக மாவட்ட எஸ்.பி.க்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாவட்ட எஸ்.பி., திருச்செங்கோடு டி.எஸ்.பி., உத்திரவின் பேரில் குமாரபாளையம் போலீசார் மணியளவில் நேரில் சென்றனர்.
அங்குள்ள பெட்டிக்கடை அருகில் செல்போன் மூலம் லாட்டரி சீட்டு நம்பர் பதிவு செய்து விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசார் கையும் களவுமாக கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்து இன்னும் ஊருக்குள் யார், யார், எங்கு விற்பனை செய்து வருகிறார்கள், மொத்த விற்பனையாளர் யார்? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.