புதிய திட்டங்களை முன்னெடுக்கும் குமாரபாளையம் நகராட்சி..!

குமாரபாளையம் நகராட்சியில் காய்கறி மார்க்கெட், உயர்மட்ட பாலம் என புதிய திட்டங்களின் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-07-23 10:45 GMT

குமாரபாளையத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குமாரபாளையம் நகராட்சியில்  காய்கறி மார்க்கெட் மற்றும் உயர்மட்ட பாலம்  கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குமாரபாளையம் தம்மண்ணன் சாலையில் அப்பன் மேடு பகுதியில் கோம்பு பள்ளத்தில் தரைமட்ட பாலம் உள்ளது. மழைக்காலங்களில் சிறிய மழை என்றாலும் கோம்பு பள்ளம் கழிவுநீர் தரைமட்ட மட்ட பாலத்தின் மேலே பாய்ந்து ஓடும் நிலை ஏற்படும். இதனால் பாதை துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் பல கி.மீ. தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வந்தது. இந்த இடத்தில் உயர்மட்ட பாலம் அமைக்க நீண்ட காலமாக  பொதுமக்கள்   கோரிக்கை விடுத்திருந்தனர்.

திட்டம் 1

புதிதாக பொறுப்பேற்ற சேர்மன் விஜய்கண்ணன் இதனை கருத்தில் கொண்டு உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டார். இதற்காக மூலதன மானிய நிதியில் இருந்து 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மூன்று மாதங்கள் முன்பு பூஜை போடப்பட்ட நிலையில், இதன் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திட்டம் 2

குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் சேதமானதால், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 2 கோடியே 28 லட்சம் மதிப்பில் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் கட்டப்பட உள்ளது. கட்டுமான பணிகள் முடியும் வரை தற்காலிகமாக மார்க்கெட் பஸ் ஸ்டாண்டில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News