குமாரபாளையம் துணை தாசில்தார் பொறுப்பேற்பு
குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில், துணை தாசில்தாராக ரவி பொறுப்பேற்றுக் கொண்டார்.;

குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில், துணை தாசில்தார் பொறுப்பேற்றுக் கொண்ட ரவி.
குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில், துணை தாசில்தாராக காரல் மார்க்ஸ் பணியாற்றி வந்தார். இவர் போலீஸ் பயிற்சியாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இவர் இருந்த இடத்தில், பரமத்தி வேலூர் தாலுக்காவில், துணை தாசில்தாராக பணியாற்றிய ரவி நியமிக்கப்பட்டார்.
இன்று, குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் துணை தாசில்தாராக ரவி பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு தாசில்தார் தமிழரசி, ஒ.ஏ.பி. தாசில்தார் சிவகுமார், டி.எஸ்.ஒ. சித்ரா, தலைமை நில அளவையர் ரமேஷ், ஆர்.ஐ. விஜய், வி.ஏ.ஒ.க்கள் முருகன், செந்திகுமார், தியாகராஜன், ஜனார்த்தனன், கோவிந்தசாமி, பாலசுப்ரமணி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.