நெல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு எடுக்கவில்லை என நில உரிமையாளர் மீது தாக்கிய இருவர் கைது

குமாரபாளையம் அருகே நெல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு எடுக்கவில்லை என நில உரிமையாளர் மீது தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2025-03-17 12:17 GMT

நெல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு எடுக்கவில்லை என நில உரிமையாளர் மீது தாக்கிய இருவர் கைது


குமாரபாளையம் அருகே நெல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு எடுக்கவில்லை என நில உரிமையாளர் மீது தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு பகுதியில் விவசாய நிலம் எடுத்து, விவசாய தொழில் செய்து வருபவர் யுவராஜ், 46. இவர் தன வயலில் விளைந்த நெல் அறுவடை செய்ய, அறுவடை இயந்திரம் கேட்டு, குமாரபாளையம் அருகே குள்ளநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், 24, ஆத்தூர் பகுதியை சேர்ந்த கார்த்தி, 24, ஆகியோரிடம், கட்டணம் விசாரித்தார். அதற்கு இவர்கள் ஒரு மணி நேரத்திற்கு 2,200 ரூபாய் ஆகும் என்று கூறினர். தொகை அதிகமாக இருப்பதால், தனக்கு தெரிந்த சதீஷ் என்பவரிடம் பேசி, அறுவடை செய்து விட்டார். இதனால் ஆத்திரமடைந்த கோபாலகிருஷ்ணன், கார்த்தி ஆகியோர், மெசின் வாடகை பேசிய யுவராஜை கைகளால் தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் படுகாயமடைந்த யுவராஜ், குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய இருவரை கைது செய்தனர்.

Similar News