குமட்டல் வரும் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட்- நடவடிக்கை எடுக்கப்படுமா?
குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட்டில் சுகாதார சீர்கேடு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கடை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில், சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் இரவில் தங்கி வருகின்றனர். இவர்கள் பல ஊர்களில் இருந்து வந்தவர்களும் உள்ளனர். பலரால் கொண்டு வந்து இங்கு விடப்பட்டவர்களும் உள்ளனர். வயது முதிர்வு, ஆதரவு இல்லாமை, கடும் நோய் போன்ற காரணங்களால் இவர்கள் இப்படி தங்க விடப்பட்டுள்ளனர்.
பஸ் ஸ்டாண்ட் கடைகள் முன்பு இரவு நேரத்தில் படுத்து தூங்குபவர்கள், பகலில் கடை திறக்கும் நேரம் வந்தாலும் எழுந்திருப்பதில்லை. மேலும் கடை முன்பே சிறுநீர் கழித்தல், எச்சில் துப்புதல், மலம் கழித்தல் உள்ளிட்ட சுகாதார சீர்கேடுகளை செய்து வருகின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, கடைக்கு வருவோம் முகம் சுளிக்கின்றனர்.
பலவிதமாக நோய்கள் பரவும் நிலையில், இது போன்ற நபர்கள் செய்யும் அசுத்தத்தால், நோய் பரவல் அதிகமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.இது போன்ற சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் நபர்களை பாதுகாப்பு மையத்தில் சேர்த்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் வியாபாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.