அரசு பள்ளியில் சரிபார்க்கப்பட்ட என்.சி.சி. மாணவர்களின் ஆவணங்கள்!

குமாரபாளையம் அரசு பள்ளியில் என்.சி.சி. மாணவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட ன.;

Update: 2024-07-18 11:00 GMT

படவிளக்கம் : குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் என்.சி.சி. மாணவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட ன.

அரசு பள்ளியில் சரிபார்க்கப்பட்ட என்.சி.சி. மாணவர்களின் ஆவணங்கள்

குமாரபாளையம் அரசு பள்ளியில் என்.சி.சி. மாணவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட ன.

ஈரோடு 15 ஆவது தமிழ்நாடு பட்டாலியனின் கமாண்டிங் ஆபிஸர் அஜய் குட்டினோ மற்றும் அலுவலக அதிகாரி கோபால் ஆகியோரின் ஆணையின்படியும் சுபேதார் மேஜர் சுரேஷ் அவர்களின் ஆலோசனையின் படியும் நாயக் சுபேதார் பவன் குமார் மற்றும் ஹவில்தார் பால்பாண்டி ஆகியோர் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 30 மாணவர்களை அவர்களின் உயரம், எடை அளவு, ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், போன்ற பல்வேறு வழிமுறைகளை பின்பற்றி தேசிய மாணவர் படை மாணவர்களை தேர்வு செய்தார்கள். தலைமை ஆசிரியர் ஆடலரசு, என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி தலைமை வகித்தனர். இங்கு ஒவ்வொரு வருடமும் 50 மாணவர்களுக்கு என்.சி.சி பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் வீரநடை, துப்பாக்கி சுடுதல், துப்பாக்கிகளை பிரித்து பூட்டுதல், தூரங்களை கணக்கிடுதல், வரைபட பயிற்சிகள், 10 நாள் சிறப்பு முகாம்கள், எழுத்து தேர்வு போன்ற பல்வேறு முறைகளில் தேசிய மாணவர் படையில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு இறுதியாக இம்மாணவர்களுக்கு ஏ சான்றிதழ் அளிக்கப்படுகிறது.

இச்சான்றிதழானது காவல்துறை, ராணுவம் ரயில்வே துறை, வனத்துறை, அக்னி பாத் போன்ற துறைகளை தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்கு 2 சதவீதம் சிறப்பு இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதுடன் மாணவர்களின் உயர்கல்விக்கும், எதிர்கால நலனுக்கும் உறுதுணையாக இருக்கும். புதிதாக தேர்வு செய்யப்பட்ட 30 மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆடலரசு மற்றும் உதவி தலைமை ஆசிரியர் ரவி, தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் கார்த்தி ஆகியோர் வாழ்த்தி பாராட்டினார்கள். நேற்று இந்த மாணவர்களின் ஆதார், போட்டோ, உடல்தகுதி சான்று, சரிபார்க்கப்பட்டு, சேமிப்பு கணக்கு துவக்கப்பட்டது. ஆசிரியர்கள் சிவக்குமார், மணிகண்டன், மேலாண்மைக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News