குமாரபாளையத்தில் என்.சி.சி. மாணவர்களின் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் என்.சி.சி. மாணவர்கள் பங்கேற்ற உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2022-03-22 14:45 GMT

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் என்.சி.சி. மாணவர்கள் பங்கேற்ற உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் என்.சி.சி. மாணவர்கள் பங்கேற்ற உலக தண்ணீர் தின விழிப்புணர்வு பேரணி தலைமை ஆசிரியர் ஆடலரசு தலைமையில் நடைபெற்றது.

விடியல் பிரகாஷ், சேவற்கொடியோர் பேரவை நிர்வாகி பாண்டியன், என்.சி.சி. அலுவலர் அந்தோணிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தனர். என்.சி.சி. மாணவர்கள் பங்கேற்று, தண்ணீரின் அவசியம் குறித்தும், வரும்காலங்களில் நீரின் தேவை மற்றும் பற்றாக்குறை ஆகியவை குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தவாறும், பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்கள் போட்டவாறும் சென்றனர்.

பள்ளி வளாகத்தில் துவங்கிய பேரணி, பெராந்தர் காடு, காந்திபுரம், சேலம் சாலை உள்ளிட்ட பல பகுதிகளின் வழியாக சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது. உதவி தலைமை ஆசிரியர் அங்கப்பராஜ், ஆசிரியர் ரவி உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News