குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் தேசிய தர உறுதி சான்று குழு ஆய்வு

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் தேசிய தர உறுதி சான்று குழுவினர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2022-02-13 09:15 GMT

குமாரபாளையம் ஜி.ஹெச்.ல் தேசிய தர உறுதி சான்று குழுவினர் ஆய்வு செய்தனர்.

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் தேசிய தர உறுதி சான்று குழுவினர் இன்று ஆய்வு செய்தனர்.

இது குறித்து தலைமை டாக்டர் பாரதி கூறுகையில், நாமக்கல் சுகாதார இணை இயக்குனர் ராஜ்மோகன் தலைமையில், மண்டல அலுவலர் ஜெயந்தி உள்ளிட்ட தேசிய தர உறுதி சான்று குழுவினர் ஆய்வு செய்தனர்.

அரசு மருத்துவமனையில் எத்தனை டாக்டர்கள், நர்ஸ்கள், பணியாளர்கள் உள்ளனர்? சம்பளம் எவ்வளவு தரப்படுகிறது? மொத்தம் இருக்கும் படுக்கை வசதி எத்தனை? தங்கி சிகிச்சை செய்து கொள்ளும் நோயாளிகளுக்கு உணவு எங்கு சமைக்கப்படுகிறது? சமையல் செய்பவர்கள் விதிமுறைகளளை பின்பற்றி பணிகளை செய்கிறார்களா? எவ்வளவு மருந்து தேவைப்படுகிறது, இதன் கழிவுகள் பிரித்து அனுப்பப்படுகிறதா? இவைகளுக்கெல்லாம் கணக்கு புத்தகம் எழுதி பின்பற்றப்படுகிறதா? என்பது உள்ளிட்ட பல கேள்விகள் கேட்டனர்.

இது முதற்கட்ட ஆய்வு தான். இது போல் மேலும் இரண்டு கட்ட ஆய்வு நடைபெறும். இரண்டாவது ஆய்வு பிற மாவட்டத்தில் இருந்தும், மூன்றாவது ஆய்வு பிற மாநிலத்தில் இருந்தும் மத்திய அரசால் அனுப்பி வைக்கப்படுவார்கள். அதன் பின் சான்றிதழ் வழங்கப்பட்டு, அரசு மருத்துவமனை மேம்பாட்டிற்கு நிதி உதவி வழங்குவார்கள் என அவர் கூறினார்.

Tags:    

Similar News