தேசிய அளவிலான யோகா போட்டி: குமாரபாளையம் மாணவர்கள் சாதனை..!

தேசிய அளவிலான யோகா போட்டியில் குமாரபாளையம் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

Update: 2023-12-06 03:43 GMT

தேசிய அளவிலான யோகா போட்டியில் குமாரபாளையம் மாணவ, மாணவியர்கள் சாதனை படைத்துள்ளனர்.

தேசிய அளவிலான யோகா போட்டியில் குமாரபாளையம் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

தேசிய அளவிலான யோகா போட்டிகள் கோவாவில் நடந்தன. இதில் மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, டெல்லி ஆகிய 7 மாநில அணிகள் போட்டியிட்டன. தமிழகம் சார்பில் பங்கேற்ற 50 மாணவ, மாணவியர்களில், குமாரபாளையம் யோகா அரவிந்த் பயிற்சி மைய மாணவ, மாணவியர், பயிற்சியாளர் மதுமிதா தலைமையில் 25 பேர் பங்கேற்றனர். இதில் 13 தங்கப்பதக்கம், 12 வெள்ளிப்பதக்கம், 10 வெண்கல பதக்கங்கள் வென்று, சர்வதேச போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

மகளிர் பிரிவில் இனியாஹர்ஷினி சாம்பியன்ஷிப் வென்று, தமிழக அணிக்கு பெருமை சேர்த்துள்ளார். தலைமை பயிற்சியாளர் அரவிந்த் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சாதனை மாணவ, மாணவியரை பாராட்டினர்.

சர்வதேச யோகா போட்டி தாய்லாந்தில் நடந்தது. இதில் 17 நாடுகளை சேர்ந்த யோகா போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் ஆண்கள், பெண்கள் தலா 25 பேர் பங்கேற்றனர். இதில் குமாரபாளையம் அரவிந்த் யோகா பயிற்சி மையத்தை சேர்ந்த மதுமிதா, அங்கு நடந்த ஐந்து பிரிவுகளிலான போட்டிகளில் பங்கேற்று, மூன்று போட்டிகளில் தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை பதக்கங்கள் வென்று சாதனை படைத்தார். 

இவர் சர்வதேச யோகா நடுவருக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று, சர்வதேச நடுவராக தேர்வு செய்யப்பட்டார். நவ 27, 28ல் கோவாவில் நடக்கும் தேசிய அளவிலான யோகா போட்டியில், தமிழ்நாடு அரசின் யோகா பயிற்சியாளராக நியமனம் பெற்றுள்ளார். இந்த போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்கும் 40 போட்டியாளர்களில், 25 பேர் அரவிந்த் யோகா பயிற்சி மைய மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர். சாதனை படைத்த மதுமிதாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஆசிய யோகாசன போட்டியில் குமாரபாளையம் மாணவ,மாணவியர் சாம்பியன்ஷிப்பட்டம் வென்றனர்.

ஆசிய அளவிலான யோகாசன போட்டிகள் தாய்லாந்து நாட்டில், பாங்காங் நகரில் நடந்தது. இதில் தமிழக அணி சார்பில் இந்திய அணிக்காக குமாரபாளையம் அரவிந்த் யோகா பயிற்சி நிலைய மாணவ, மாணவியர் உள்ளிட்ட 50 பேர் பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்ற 25 மாணவ, மாணவியர்களும் வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக ஆசிய அளவிலான யோகாசன போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர். இவர்களை தமிழ்நாடு யோகா பெடரேசன் பொது செயலர், இந்தியா யோகா அணியின் தேர்வாளர் அரவிந்த் தலைமையில் அழைத்து சென்றார். சாதனை படைத்த மாணவ, மாணவியரை நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் பலரும் பாராட்டினர்.

Tags:    

Similar News